/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் இரவு 9:00 மணிக்கு மேல் அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் புறக்கணிப்பு

ADDED : ஜன 03, 2026 06:47 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இரவு 9:00 மணிக்கு மேல் அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் பல மாதங்களாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பஸ் வராததால் மும்முனை சந்திப்பில் நின்று செல்லும் நிலை உள்ளது.
பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் சாயல்குடி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
இரவு 9:00 மணிக்கு மேல் சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்கள் வராமல் தொடர் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன. இதனால் பஸ்சை நம்பி வரக்கூடிய பெண்கள் சிறியவர்கள் மற்றும் அனைத்து தரப் பினரும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மும்முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி செல்வதால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் சூழ்நிலை இல்லாமல் உள்ளது.
எனவே சம்பந்தப் பட்ட போக்குவரத்து மேலாளர்கள் சாயல்குடியில் இரவு முழுவதும் பஸ் சேவையை தொடர் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் நடக்கும் வாரச் சந்தைக்கு உரிய எண் ணிக்கையில் போலீசார் பணியர்மத்தி போக்கு வரத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.