/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணிக்கு இரவில் வர மறுக்கும் அரசு பஸ்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதி

ADDED : ஜன 01, 2026 05:31 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி நகருக்குள் வரக்கூடிய அரசு டவுன் பஸ்கள் 6 மாதங்களுக்கு மேலாக இரவில் வருவதில்லை. பஸ்வசதியின்றி பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலின் நான்கு ரத வீதியைச் சுற்றிலும் நகர் அமைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை சென்று மீண்டும் ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்கள் மாலை 6:30 மணிக்கு மேல் திருப்புல்லாணி வழியாக இயக்கப்படுவது இல்லை. இதன்காரணமாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அதனை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலை செக் போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு செல்வதால் அங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவிற்கு நடந்து வரும் நிலை உள்ளது. எஸ்.டி.பி.ஐ., கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: வழக்கம்போல் வரக்கூடிய அரசு டவுன் பஸ்கள் 6 மாதங்களாக இரவில் வருவதில்லை. இதுகுறித்து அரசு டிப்போ போக்குவரத்து கழக மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். பஸ் இயக்கவில்லை ஏனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.