ADDED : ஜன 01, 2026 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணா விரதம் இருந்தனர். மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி அதற்கான நிதியை குறைத்ததை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெயமுருகன், சோமசுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

