/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பராமரிப்பின்றி அரசு கால்நடை மருத்துவமனை
/
பராமரிப்பின்றி அரசு கால்நடை மருத்துவமனை
ADDED : ஜன 01, 2026 05:30 AM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு கால்நடை மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர் மண்டியுள்ளது.
இங்குள்ள கால்நடை மருத்துவமனையில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து திறந்த வெளியாக உள்ளது.
கால்நடை மருத்துவ வளாகத்தை சுற்றிலும் காம்பவுண்ட் இல்லாத நிலை உள்ளது. இதனால் இதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள தளவாடப்பொருள்களை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போன்று திருப்புல்லாணி அரசு கால்நடை மருத்துவமனை கட்டடம் சேதமடைந்துள்ளது. 2017ல் கட்டப்பட்ட இக்கட்டடம் தரமற்ற கட்டுமானப் பணியால் பெருவாரியாக இடிபாடுகளுடன் உள்ளது.
எனவே மாவட்ட கால்நடைத்துறையினர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

