ADDED : ஜன 01, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 12 கோடியே 35 லட்சத்தில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி நடைபெற உள் ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 12 கோடியே 35 லட்சம் செலவில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.

