/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
/
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
ADDED : ஜன 09, 2025 04:56 AM

பரமக்குடி: பரமக்குடியில் ஆங்காங்கே பிரேக் டவுனாகி நிற்கும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பரமக்குடி பணி மனையிலிருந்து 80க்கும் மேற்பட்ட டவுன் பஸ் மற்றும் தொலை துார பஸ்கள் இயக்கப்படுகின்றன. கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் என ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. பஸ்களை பராமரிக்க உதிரிப் பாகங்கள் இல்லாமல் திணறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக டவுன் பஸ்கள் உட்பட தொலைதுார பஸ்களும் பிரேக் டவுன் ஆவது அதிகரித்துள்ளது. இதனால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விசேஷங்களுக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நேற்று பரமக்குடியில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்பட்ட 25ம் எண் டவுன் பஸ் பரமக்குடி- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது கியர் ராடு பழுது எனக்கூறி இறக்கி விட்டுச் சென்றனர். இதனால் கைக்குழந்தைகளுடன் சென்ற பெண்கள், முதியவர்கள் ஆட்டோவில் சென்றனர்.
இவர்கள் 5 கி.மீ., வரை பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டிய நிலையில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்புகளை நோக்கி நடக்க வேண்டியதாயிற்று.
இச்சூழலில் பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்களை பராமரிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அரசு நிர்வாகம் சார்பில் மெமோ கொடுப்பதாக ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே பஸ்களை முறையாக பராமரிக்க உதிரி பாகங்கள் வழங்கி பாதுகாப்பான பயணத்திற்கு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

