/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நேரத்திற்கு வராமல் போக்கு காட்டும் அரசு பஸ்கள் ராமநாதபுரம் - பெரியபட்டினம் வரை பயணிகள் அவதி

ADDED : நவ 21, 2025 04:19 AM
பெரியபட்டினம்: ராமநாதபுரத்தில் இருந்து ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை வழியாக பெரியபட்டினம் 22 கி.மீ.,ல் உள்ள நிலையில் இங்கு வரும் டவுன் பஸ்கள் உரிய நேரத்தில் வராததால் பயணிகள், வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினம் வரை இயக்கப்படும் 4, 4-ஏ முதல் 4- எப் ஆகிய வழித்தட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.ராமநாதபுரத்தில் இருந்து பட்டணம்காத்தான் வழியாக ஒவ்வொரு ஸ்டேஜ் நிறுத்தத்திலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியபட்டினம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வேலைக்கு செல்வோர் ஏராளமானோவர் நம்பி செல்கின்றனர்.
இந்நிலையில் காலை 7:35 முதல் 8:30 வரை முறையான நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பயணிகள் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் பஸ் இயக்கப்பட்டாலும் அத்தியாவசிய நேரமான காலை 7:35 முதல் 9:30 வரை பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. இதனால் காலதாமத்துடன் பள்ளி, கல்லுாரி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வழித்தடத்தில் ஒரே நேரத்தில் வரிசையாக செல்லக்கூடிய பஸ்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலர்களின் வேலை நேரத்தை கணக்கிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக அரசு டவுன் பஸ் இயக்க போக்குவரத்து கழக மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.