ADDED : நவ 21, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிறைக்குளம் ஊராட்சி ராஜாக்கள் பாளையத்தில் சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தால் ஆர்.ஓ., பிளான்ட் செயல்பாட்டிற்கு வந்தது. துவக்க விழாவிற்கு நிறுவன மேலாளர் சுதீர் குமார் தலைமை வகித்தார். சிக்கல் வருவாய் ஆய்வாளர் குபேந்திர குமார், வி.ஏ.ஓ., சகுபர் சாதிக், முன்னாள் ஊராட்சி தலைவர் பொம்மியம்மாள், தட்சிணாமூர்த்தி, கிராம தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
1000 லி., குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

