ADDED : மே 20, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் விஜய ராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நுாலகர்களை நிரந்த ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர்.
மாவட்டத்துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, பாலுச்சாமி, மாவட்ட இணை செயலாளர்கள் முத்துசாமி, சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.