ADDED : ஜூலை 15, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்அருகேஅரசு ஊழியர் சங்கம்சார்பில் விருநகரில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல்நடத்திய போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்டப்பொருளாளர் முனீஸ்பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் அப்துல் நஜ்முதீன் கண்டன உரையாற்றினார். வட்டகிளை நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். பரமக்குடிவட்டக்கிளை தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.