/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 13, 2025 11:55 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் நஜ்முதீன், மாவட்ட துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி, கல்லுாரி விடுதிகளில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு பிற மாவட்டங்களில் பணிவரன்முறை மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. உடனடியாக பணி வரன்முறை செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், துாய்மைபணியாளர்கள் பங்கேற்றனர்.