/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோரிக்கை அட்டை அணிந்து அரசு ஊழியர்கள் பணி
/
கோரிக்கை அட்டை அணிந்து அரசு ஊழியர்கள் பணி
ADDED : அக் 16, 2025 11:56 PM

ராமநாதபுரம்: பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை அட்டையுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பை சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி புரிந்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் போராட்டம், பிரசாரம் நடத்துகின்றனர். நேற்று அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஒய்வூதியத் திட்டத்தை உடன் அமல்படுத்த வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து மாவட்ட கரு வூலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரிந்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜய ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் நஜ்முதீன், மாவட்ட இணைச் செயலாளர் ரோஸநார பேகம், கணக்கு கருவூலத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர், கலெக்டர் அலுவலக வட்டக்கிளை பொருளாளர் தாமரை உட்பட பலர் பங்கேற்றனர். அடுத்தகட்டமாக அக்.,27 முதல் 31 வரை மாநிலம் தழுவிய பிரசாரம், நவ., 18ல் ஒரு நாள் வேலை நிறுத்தம், அதன் பிறகும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.