/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2025 11:56 PM
பரமக்குடி: பரமக்குடியில் ஒருங் கிணைந்த நீதிமன்றம் முன் வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடியில் என்.டி.ஏ., கூட்டணி கட்சி களின் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற வளாகம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பகுதிகளில் வக்கீல் ராஜீவ் காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வி.சி.க., வினரை கண்டித்தனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு போலீஸ் மற்றும் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
வக்கீல்கள் சேது பாண்டியன், காமராஜ், வெங்கடேசன், பிரபு, சுரேஷ், பிரபாவதி, அரவிந்தராஜ், முருகன், கேசவன், கார்த்திக், பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.