sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழை: கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் அவதி

/

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழை: கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழை: கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் விடிய விடிய பெய்த பலத்த மழை: கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் அவதி


ADDED : அக் 16, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். போதிய வடிகால் வசதியின்றி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகம், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியது.

வடகிழக்கு மழை நேற்று துவங்கிய நிலையில் முதல் நாளே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் பர வலாக மழை பெய்தது. ராமநாதபுரத்தில் நேற்று காலை 8:00 மணி வரை 22 மி.மீ., தங்கச்சி மடத்தில் 20 மி.மீ., வாலிநோக்கத்தில் 19 மி.மீ., என மாவட்ட முழுவதும் 144.70 மி.மீ., மழை பதிவானது.

இதன் காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக் கோட்டை, பட்டணம் காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர். ஓம்சக்திநகர், பாரதிநகர், மதுரை, ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர்.

தொடர்ந்து மழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப் பட்டனர். குறிப்பாக ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதால் துர்நாற்றத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டனர். நகராட்சி பணியாளர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள், மக்கள் சிரமப்பட்ட னர். இதே போன்று மதுரையார் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகத்திற்குள் முன்பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. அதனை பணியாளர்கள் வாளியில் எடுத்து வெளியே ஊற்றினர். மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை முழுமையாக ஊருணிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

* நேற்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி அலுவலகம் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரத வீதியில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்று அவதிப்பட்டனர்.

* பரமக்குடியில் காந்தி சிலை ரோடு பகுதி முழு வதும் தண்ணீர் தேங்கியது. இங்கு அதிகளவில் தெருவோர வியாபாரிகள் கடை விரித்த நிலையில் மிகுந்த அவதி அடைந்தனர். இதே போல் உழவர் சந்தை, வாரச்சந்தை பகுதி உட்பட ரோடுகளில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கியது. பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவிகள் சிரமப்பட்டனர்.

முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் தடு மாறும் நிலை ஏற்படுகிறது. ஆகவே பண்டிகை காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க துறை அதிகாரிகள் கழிவுநீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us