/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி: மீனவரை மீட்டவர்களுக்கு பாராட்டு
/
முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி: மீனவரை மீட்டவர்களுக்கு பாராட்டு
முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி: மீனவரை மீட்டவர்களுக்கு பாராட்டு
முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி: மீனவரை மீட்டவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2025 11:55 PM
தொண்டி: தொண்டி அருகே நம்பு தாளையில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சமூக அடிப் படையிலான அவசர கால பொறுப்பு சார்ந்த பயிற்சி திட்டம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அவசர கால பயிற்சி நடந்தது.
ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்தார். மீன் வளத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன், மீன் வளத்துறை ஆய்வாளர் அப்தாஹிர், கடற்கரை காவல் நிலைய ஏட்டு ரமேஷ்குமார்., நுண் ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, வருவாய் ஆய்வாளர் மேகமலை மற்றும் 75 மீனவர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் மழை, புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது மீனவர்களும், மீட்பு படையினரும் மேற்கொள்ள வேண்டிய அவசர கால பொறுப்புகள் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சில நாட்களுக்கு முன்பு காரங்காடு மீனவர் அரு ளானந்தம் கடலில் பல மணி நேரம் தத்தளித்தார்.
அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்த நம்புதாளை மீனவர்கள் ஜெகதீஸ்வரன், நாகூர்மீரா மற்றும் மீனவர்களுக்கு மரைன் போலீசார் சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.