ADDED : அக் 16, 2025 11:55 PM

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
பசும்பொன்னில் குடிநீர், ரோடு, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதை யடுத்து முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பசும்பொன்னில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்தார். அப்போது பேவர் பிளாக் ரோடு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளையும் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழித்தடங்களில் போதுமான தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
டி.எஸ்.பி., இளஞ்செழியன் உள்ளிட்ட போலீசார் பலர் உடன் இருந்தனர்.