/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓராண்டாக திறப்பு விழா காணாத அரசு துணை சுகாதார நிலையம்
/
ஓராண்டாக திறப்பு விழா காணாத அரசு துணை சுகாதார நிலையம்
ஓராண்டாக திறப்பு விழா காணாத அரசு துணை சுகாதார நிலையம்
ஓராண்டாக திறப்பு விழா காணாத அரசு துணை சுகாதார நிலையம்
ADDED : ஆக 06, 2025 01:03 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் ஓராண்டிற்கு முன்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் திறக்கப்படாத நிலை தொடர்கிறது.
தினைக்குளம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் 1980ல் கட்டப்பட்ட கட்டடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
கட்டுமானப் பணிகள் ரூ. 30 லட்சத்தில் முழுமை அடைந்த நிலையில் கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டாக ரெகுநாதபுரம் துணை சுகாதார நிலையம் தற்காலிகமாக செயல்படக்கூடிய இடம் தற்போது வரை தெரிவிக்கப்படாத நிலையில் உள்ளது.
இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை செய்யவும் மருந்து மாத்திரையில் பெறவும் வழி இல்லாத நிலை தொடர்கிறது.
தினைக்குளம் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதமிழ் கூறுகையில், ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் குவாட்டர்சுடன் கூடிய துணை சுகாதார நிலையம் திறப்பு விழா இன்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தை திறக்கக் கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே தொகுதி எம்.எல்.ஏ., கட்டடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.