/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தல்
கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 12, 2025 05:32 AM

ராமநாதபுரம்: ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இளைஞரணி இணைப்பு விழா பார்த்திபனுார் சிவன் கோவில் மகாலில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சேகர், மாநில துணைத்தலைவர் சடாச்சரம், துணை செயலாளர் மதி, மாநில மண்டல அமைப்பு செயலாளர் ஜெயராம், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீர செல்வம், மாநில மகளிரணி துணை அமைப்பாளர்கள் தனலட்சுமி, கவிதா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தனர்.
ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கார்ப்பரேட் சலுான்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு உள்பட வாழ்நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்பாடுகளை பார்த்திபனுார் கிளை நிர்வாகிகள் செந்திவேல், சதீஷ்குமார், தியாகராஜன் செய்தனர்.

