/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்
/
ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்
ADDED : நவ 24, 2024 06:51 AM

திருப்புல்லாணி : உத்தரவை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார். சமூக நலத்துறை வட்டார விரிவாக்க அலுவலர் முருகேஸ்வரி, அரசு நிர்ணயித்த வயதைக் காட்டிலும் குறைந்த வயதுடைய குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார்.
*மேதலோடை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மெனையத்தாள் தலைமை வகித்தார். ஒன்றிய கணக்காளர் லதா முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வளர்ச்சி குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* சின்னாண்டிவலசையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சுமதி வரவு செலவு கணக்குகளை வாசித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஜெயந்தி வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள், மக்கள் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் உமர் பாரூக் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கிராமத்தினர் ரோடு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.