/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உள்ளாட்சி தினத்தில் கிராம சபை கூட்டம்
/
உள்ளாட்சி தினத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:35 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது.
ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார். அவர் கூறியதாவது:
கிராமசபை கூட்டத்தின் நோக்கம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து தீர்மானங்களை நிறைவேற்றுவதாகும்.
கிராம சபையில் முன்மொழியும் ஒவ்வொரு திட்டமும் வலுசேர்க்கக் கூடியதாகும். இப்பகுதியில் சாலைகள் சீரமைத்தல், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும், கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் நிதியாண்டில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும் என்றார். வேளாண் துறை சார்பில் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், உதவி இயக்குனர் பத்மநாபன், பி.டி.ஓ.,க்கள் ஜானகி, பாலதண்டாயுதம் உட்பட அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

