/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெயரளவில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களால் பயனில்லை : விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
/
பெயரளவில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களால் பயனில்லை : விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
பெயரளவில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களால் பயனில்லை : விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
பெயரளவில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களால் பயனில்லை : விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : அக் 16, 2025 11:50 PM
பெருநாழி: அக்., 2ல் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு அக்., 11ல் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் கிராம சபை கூட்டம் நடந்த நிலையில், பொதுமக்களிடம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பா.ஜ., கமுதி தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க மக்களுக்கு அதி காரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தங் களுடைய கோரிக்கைகளை மற்றும் குறை நிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டம் கூட்டி தொடர்புடைய அலுவலர்களை பங்கேற்க வைத்து நடத்தப்பட வேண்டும் என்பது நடைமுறை.
ஆனால் சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கமுதி யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிர்வாகத்தில் முன்னறிவிப்பு செய்து கூட்டத்தை கூட்டி அதிகாரிகளை வரவைத்து குறைகளை கேட்பதில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் முறையாக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவில்லை. ஊராட்சிகளில் வரவு செலவு கணக்கை கிராம மக்களிடம் தெரிவிப்பதில்லை. மக்களை கூட்டி கிராம சபை கூட்டம் நடத்தாமல் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் பெயரளவிற்கு கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே இனிவரும் காலங்களில் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தவும், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிவர்த்தி செய்யவும் தனி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.