/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
/
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 16, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மக்கலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் கடை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆய்வு மேற்கொண்டார். ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
முன்னதாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, ஆர்.ஐ., ராஜலட்சுமி, வி.ஏ.ஓ., குணசேகரன் உட்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.