/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முப்படை ஓய்வூதியர்கள் குறைகளை தீர்க்க குறைதீர் முகாம் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்

ADDED : நவ 18, 2025 04:03 AM

ராமநாதபுரம்: முப்படை ஓய்வூதீயர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க மாநிலம் முழுவதும் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது, என சென்னை பாதுகாப்புத்துறை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு வழங்க மாவட்ட அளவில் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் விமானப்படை வீரர்கள் இயக்குநரகம், மும்பை கடற்படை ஊதிய அலுவலகம், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையம், நாசிக் பீரங்கி படை, லக்னோ ராணுவ மருத்துவப் பிரிவு என பாதுகாப்பு துறை சார்ந்த அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்பர்.
தற்போது வரை ஓய்வூதியம் கிடைக்காதவர்கள், ஓய்வூதியம் குறைவாக பெறுவோர், ஆதார், பான் எண் சேர்ப்பது, பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு தீர்வு காணப்படும். எந்த குறைகளாக இருந்தாலும் 5 நிமிடத்தில் தீர்வு வழங்க வேண்டும் என்ற இலக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் பணி நவ.1 முதல் நவ.30 வரை நடக்கிறது. ராமநாதபுரத்தில் நவ.18 (இன்று) முப்படை ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் நடக்கவுள்ளது. தொடர்ந்து நவ.26 வேலுாரிலும், அடுத்த மாதம் மதுரை, தேனியிலும் நடத்தப்படும் என்றார்.