/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய்களால் மாணவர்கள் மக்கள் அச்சம்
/
நாய்களால் மாணவர்கள் மக்கள் அச்சம்
ADDED : நவ 18, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி கீழரத வீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கூட்டமாக உலாவரும் நாய்களால் பள்ளி மாணவர்கள்,மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் கீழரத வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
டூவீலரில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன. இதனால் நடந்து செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

