ADDED : ஜூலை 07, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம், பி.கே.மூக்கையாத்தேவர் அரசு போட்டி தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் அரசு தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் நடக்கிறது.
தற்போது குரூப்- 4 தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பயன்பெறும் வகையில் இலவச மாதிரி தேர்வு நாளை(ஜூலை 9ல்) நடக்கிறது.
பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் போட்டோ, ஹால் டிக்கெட் நகலுடன் வந்து தேர்வு எழுதலாம். அன்றே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.