/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவலாளி அடித்துக்கொலை மருத்துவமனை முற்றுகை
/
காவலாளி அடித்துக்கொலை மருத்துவமனை முற்றுகை
ADDED : நவ 26, 2025 04:33 AM
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தென்னந்தோப்பு காவலாளியை அடித்து கொலை செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியுமாறு உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
பரமக்குடி அருகே மஞ்சள்பட்டணம் தென்னந்தோப்பில் லட்சுமணன் 70, காவலாளியாக இருந்தார். இவர் பிரண்டைக்குளத்தை சேர்ந்த வேலு 70, உடன் பேசியபடி வைகை ஆற்றின் கரையோரம் நவ.,17 ல் சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் இருவரையும் தாக்கிய நிலையில் வேலு சம்பவ இடத்தில் இறந்தார். லட்சுமணன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலை தொடர்பாக என்.வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி 26, கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லட்சுமணனும் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் உறவினர்கள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

