/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : நவ 26, 2025 04:33 AM
கமுதி: கமுதி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பரிசோதனைகளை டாக்டர்கள் அனுரேகா, பிரபாகரன், ராஜ்குமார், ஆனந்த், கமலேஷ் செய்து விளக்கம் அளித்தனர்.
மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, செவித்துணை கருவி, வீல் சேர், ரெகுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. 15 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பாசிரியர் முத்திருளாண்டி நன்றி கூறினார்.

