ADDED : மே 16, 2025 03:04 AM
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் முன்னாள் மாணவர்கள் சேவை மையம் மற்றும் ராமநாதபுரம்மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு வேலையில் முன்னுரிமை தகவல்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முகமது முக்தார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார், இளநிலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டல், தனியார்துறை வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வது குறித்த தகவல்களை அலுவலர்கள் விளக்கிப்பேசினர்.
எஸ்.பி.பட்டினம் முன்னாள் மாணவர்கள் சேவை மைய நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆலோசகர் அக்பர்பாதுஷா நன்றி கூறினார்.