/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமூக ஒற்றுமை கடைப்பிடிக்கும் ஊராட்சிக்கு நல்லிணக்க விருது ரூ.1 கோடி பரிசு

ADDED : ஜூலை 07, 2025 11:26 PM
ராமநாதபுரம்: ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் 2025ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவத்துடன் அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
https://tinyurl.com/Panchayataward (அல்லது) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/ Samooga_Nallinakka_Ooraatchi_Award_ Application.pdf என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கான விண்ணப்பத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 10க்குள் நேரில் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.