/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் மோடி வழியில் ராமேஸ்வரத்தில் ஹரியானா பக்தர்கள் புனித நீராடினர்

ADDED : ஜன 25, 2024 01:38 AM

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி வழியில் ராமேஸ்வரம் கோயிலில் ஹரியானா பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து விட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன.,20ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.
அக்னி தீர்த்தம், கோயிலுக்குள் 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். பின் தனுஷ்கோடியில் உள்ள ராமர் இலங்கைக்கு அமைத்த சேது பாலத்தை தரிசனம் செய்து விட்டு சென்றார். இதன் எதிரொலியாக வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று ஹரியானாவை சேர்ந்த 300 பக்தர்கள் கலசத்தில் புனித கங்கை நீரை ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்கள். பின் கலச நீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதாக ஹரியானா பக்தர்கள் தெரிவித்தனர்.