ADDED : மார் 09, 2024 08:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே மேலஅரும்பூர் பகுதியில் வயல்களில் அறுவடை செய்யப்பட்டுள்ள வைக்கோல் டிராக்டரில் ஏற்றப்பட்டது. திருவாடானையை நோக்கி இந்த டிராக்டர் சென்ற போது சவேரியார்புரம் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதில் டிராக்டரில் தீப்பிடித்தது.
இதில் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் வீரர்கள் டிராக்டரில் தீ பரவாமல் தடுத்தனர்.

