ADDED : டிச 26, 2024 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே புதுக்குடியில் 2021-22ல் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாகியுள்ளது. ஆனால் புதுப்பித்தல் பணி என்ற பெயரில் நிதி செலவிடப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
தண்ணீர் பிரச்னையால் சுகாதார வளாகம் பூட்டப்பட்டது. பேரூராட்சி அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.