/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுமைப்பணி தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
சுமைப்பணி தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 07:09 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு., சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு., சுமைப்பணி பொதுச்செயலாளர் சுடலைகாசி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பகவதி கருப்பையா, ரா.முனியசாமி, ஆர்.முனியசாமி, கணேசன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவாஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு சட்டப்பாதுகாப்பற்ற தொழிலுக்கு தனி சட்டம் இயற்றி சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2 சதவீதம் வரியை உருவாக்கி பணப்பலன்கள் வழங்க வேண்டும். பணியிடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பி.எப்., இ.எஸ்.ஐ., போனஸ், ஓய்வூதியம் ரூ.3000, சிமென்ட் டன்னுக்கு ரூ.200, கம்பி டன்னுக்கு ரூ.350, ஊக்கத்தொகை மாமுல் தவிர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமைப்பணி மாவட்டத்தலைவர் பூமிநாதன், துணை செயலாளர்கள் போஸ், செந்தில்குமார், பொருளாளர் ஸ்ரீதரன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.