UPDATED : அக் 07, 2026 12:00 AM
ADDED : அக் 06, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்தது.
சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று அப்பகுதியில் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்று அதிகமாக வீசியதால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேத மடைந்தன.
