ADDED : அக் 08, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 15 நாட்களுக்கு முன் நெல் விதைப்பு செய்யப்பட்டது.
அதன் பின் நெல் முளைப்புக்கு ஏற்ற பருவமழை இல்லாததால் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பாரனுார், ஆவரேந்தல், கலங்காப்புலி, இந்திரா நகர், அளுந்திக்கோட்டை, அத்தானுார், சோழந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று பெய்த சாரல் மழையால் வயல் வெளிகளில் நெல் முளைப்புக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவுவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.