ADDED : நவ 07, 2025 11:17 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர் வறட்சி நிலவியதால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று பெய்த சாரல் மழையால் நெல் விவசாயிகளுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி, மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சில கிராமங்களில் மட்டுமே இந்த சாரல் மழை பெய்தது.
அதே நேரம் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு ஈரப்பதம் இன்றி கருகி வரும் நிலையில் அப்பகுதிகளில் மழை இல்லாததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். நெற்பயிர் முளைப்புக்கு பின்பு களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

