/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
8 நாட்களுக்கு பிறகு அதிக மீன் வரத்து
/
8 நாட்களுக்கு பிறகு அதிக மீன் வரத்து
ADDED : நவ 24, 2025 06:17 AM

ராமேஸ்வரம்: சூறாவளி, கடல் கொந்தளிப்பு போன்ற தடைகளால் எட்டு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
வங்கக்கடலில் உருவான சூறாவளி, கடல் கொந்தளிப்பால் நவ., 14 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் சீற்றம் குறைந்து கடல் அலை சீற்றம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியதால் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். பெரும்பாலான படகுகளில் இறால், கணவாய், காரல் மீன்கள் அதிகமாக சிக்கின. எட்டு நாட் களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

