/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
47 ஊராட்சிகளில் அதிவேக இணையதள இணைப்பு
/
47 ஊராட்சிகளில் அதிவேக இணையதள இணைப்பு
ADDED : அக் 14, 2025 03:43 AM
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் கிராம சேவை மையங்களுக்கு டான்பி நெட் சேவை கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் டான்பி நெட் நிறுவனம் சார்பில் இன்டெர் நெட் சேவை வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.
இதற்காக பி.டி.ஓ., மற்றும் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக 47 ஊராட்சிகளில் உள்ள கிராம சேவை மையங்களில் டான்பி நெட் இணையதள கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
முதல் கட்டமாக அந்தந்த ஊராட்சி அலுவலகங்களுக்கும் அடுத்து வி.ஏ.ஓ., அலுவலகம் உள்பட கிராம பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்கப்படும்.
அதிவேக இணையதள வசதி கிடைப்பதால் கிராமப்புற இ-சேவை மைய செயல்பாடுகள் வேகம் பெறும். இதன் மூலம் கிராமப் புற மக்கள் ஆதார் திருத்தம், வருவாய்த்துறை சார்ந்த ஏராளமான அரசு சேவைகளை பெறலாம் என்றனர்.