/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போலீசார் அபராதம்
/
புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போலீசார் அபராதம்
புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போலீசார் அபராதம்
புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போலீசார் அபராதம்
ADDED : அக் 14, 2025 03:42 AM

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திய டூவீலர்களின் உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சி சார்பில் 16,909 சதுர அடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், மாவட்டத்திற்குள் செல்லும் பஸ்கள் இரு நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன. இங்கு டூவீலர் நிறுத்துவதற்கான ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதனை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
பலர் பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயில் அருகேயும், வளாகத்திற்குள்ளும் நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் பஸ்கள் உள்ளே சென்று வருவதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் போட்டோ வெளியானது. இதையடுத்து பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். அதற்குரிய ரசீதை வாகனத்தில் வைத்தனர்.