/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாதிரி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
/
மாதிரி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
மாதிரி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
மாதிரி பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : டிச 01, 2024 11:58 PM
ராமநாதபுரம்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர்களுக்கு பட்டணம்காத்தானில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரியை பார்வையிட்டனர்.
அனைத்து துறைகளைச் சார்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கல்லுாரியின் பல்வேறு துறைகளையும் அதன் செயல்பாடுகளையும் விளக்கினர்.
மேலும் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.
இதன் மூலம் டாக்டர் ஆகும் எண்ணம் தங்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதாக மாணவர் தெரிவித்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி டீன் அமுதாராணி, பேராசிரியர்கள், பள்ளித் தலைமையாசிரியர் ரவிஆகியோர் செய்தனர்.