/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் நெடுஞ்சாலை கால் நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
இருளில் நெடுஞ்சாலை கால் நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
இருளில் நெடுஞ்சாலை கால் நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
இருளில் நெடுஞ்சாலை கால் நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : மே 04, 2024 04:50 AM

ரோடு குண்டும் குழியுமாகியுள்ளதாலும் இரவு நேரத்தில் இருளில் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடக்கிறது. உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.30 கோடியில் இருவழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் 7 கி.மீ.,க்கு ரோட்டின் நடுவில் ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை பல இடங்களில் பழுதாகியுள்ளன. குறிப்பாக நகரில் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதிநகரில் பல மாதங்களாக எரியாமல் மின் விளக்குகள் காட்சிப்பொருளாக உள்ளன. மேலும் கீழக்கரை ரோடு புதிய ரயில்வே மேம்பாலம் அருகே இருந்து குமரய்யா கோயில் வரை எரிவதில்லை.
பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாகியுள்ளதால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி இருளில் கால் நடைகள், நாய்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடக்கிறது.
இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
மேலும் நகராட்சி பகுதியில் சாலைத்தெரு முக்கிய பஜாராக இருந்தும் இங்கு எந்த மின்விளக்கு வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை.
இரவு 9:30 மணிக்கு மேல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்ட பின் சாலை தெரு ரோடு இருளில் மூழ்கியுள்ளது.
எனவே உயிர்பலி ஏற்படும் முன் பழுதான மின் விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகள் பொருத்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.