/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே ஹிந்து முஸ்லிம் இணைந்து சந்தனம் பூசும் விழா
/
கமுதி அருகே ஹிந்து முஸ்லிம் இணைந்து சந்தனம் பூசும் விழா
கமுதி அருகே ஹிந்து முஸ்லிம் இணைந்து சந்தனம் பூசும் விழா
கமுதி அருகே ஹிந்து முஸ்லிம் இணைந்து சந்தனம் பூசும் விழா
ADDED : ஜூலை 17, 2025 11:23 PM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் மகான் கருணையானந்த ஞானபூபதிகள் என்ற முகமது இப்ராஹிம் தர்ஹாவில் ஆடி மாதம் முதல் தேதியை முன்னிட்டு 87 வது ஆண்டு மத நல்லிணக்க சந்தனம் பூசும் விழா நடந்தது. அப்போது இஸ்லாமியருடன் ஹிந்து மதத்தினர் சேர்ந்து சந்தனம் பூசி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இங்கு இஸ்லாமியர்கள் தொழுகை செய்தும், ஹிந்து மதத்தினர் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமூக மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து முஸ்லிம் மதத்தினர் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தங்களின் மத வழிபாடு பாரம்பரிய முறைப்படி கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டு முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.