/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹிந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம்
/
ஹிந்து முன்னணியினர் முற்றுகைப் போராட்டம்
ADDED : ஜன 06, 2026 05:21 AM
கீழக்கரை: ஏர்வாடியில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஹிந்து முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
ஏர்வாடியில் சின்ன ஏர்வாடி போகும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் அந்த வழியாகப் போகும் பெண்களும், பள்ளி மாணவிகளும் குடிமகன்களின் தொந்தரவால் அதிகளவு பாதிப்பை சந்திக்கின்றனர்.
அந்த கடையில் மது அருந்திய குடி மகன்கள் பொதுமக்களிம் சண்டையிடுவதால் அப்பகுதியை கடந்து செல்வோர் மன உளைச்சல் அடைகின்றனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், தொந்தரவாகவும் இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் நடந்தது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொறுப்பாளர் காளீஸ், மேகநாதன், ஒன்றிய தலைவர் கிஷோர், ஒன்றிய பொதுச் செயலாளர் சிவா, கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

