sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 திருமூவர் ஜெயந்தி விழா கோலாகலம்

/

 திருமூவர் ஜெயந்தி விழா கோலாகலம்

 திருமூவர் ஜெயந்தி விழா கோலாகலம்

 திருமூவர் ஜெயந்தி விழா கோலாகலம்


ADDED : ஜன 06, 2026 05:21 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: -: பரமக்குடி அருகே பருத்தியூர் ராமலிங்க சுவாமி கோயில் வளாகத்தில் ராமகிருஷ்ண ஞான வழிபாடு மன்றம் சார்பில் திருமூவர் ஜெயந்தி விழா நடந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், இவரது ஆன்மிக துணைவியார் அன்னை சாரதா தேவி மற்றும் இவர்களது முதன்மை சீடன் சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோர் திருமூவர் எனப் போற்றப்படுகின்றனர். ஆன்மிக விழிப்புணர்வுக்கும், மனித நேயத்திற்கும் வழிகாட்டியாக திகழ்ந்த இவர்களது ஜெயந்தி விழாவை ராமகிருஷ்ண ஞான வழிபாடு மன்றத்தினர் கொண்டாடினர்.

திருவண்ணாமலை ரமண சாதனா குடிலை சேர்ந்த சுவாமி மாத்ருசேவானந்தர் பக்தி இன்னிசை நிகழ்த்தினார். மதுரை ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி அர்கபிரபானந்தர் உரையாற்றினார். மூவரின் படத்திற்கும் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஞான வழிபாடு மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us