/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதியவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
/
முதியவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
முதியவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
முதியவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : நவ 29, 2024 05:36 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 75 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.
சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்த் துவக்கி வைத்தார். முன்னதாக புறாக்கள் பறக்க விடப்பட்டன. திருவெற்றியூர், ஓரிக்கோட்டை, அஞ்சுகோட்டை, ஓரியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் 36 முதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் வகையில் இத் திட்டம் துவங்கப்பட்டது.
சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் பிரிட்டோ ஜெயபாலன், சின்னக்கீரமங்கலம் வின்சென்ட் தே பவுல்சபை வட்டார தலைவர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.