/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று போலியோ சொட்டுமருந்து வழங்கல்
/
விடுப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று போலியோ சொட்டுமருந்து வழங்கல்
விடுப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று போலியோ சொட்டுமருந்து வழங்கல்
விடுப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று போலியோ சொட்டுமருந்து வழங்கல்
ADDED : மார் 04, 2024 05:03 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் விடுப்பட்ட 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு வீடுகளுக்கு சென்று சுகாதாரம், அங்கன்வாடி மையப்பணியாளர்கள் சொட்டுமருந்து வழங்க உள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தனது மகள் பத்மாவதி 4,போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.
கலெக்டர் கூறியதாவது: சத்துணவு மையங்கள், பள்ளிகள், துணை சுகாதார மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கோயில்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள் என1261 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நேற்று(மார்ச் 3)விடுபட்ட 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை (இன்று) முதல் ஒரு வார காலத்திற்கு சுகாதாரப்பிரிவு, அங்கன்வாடி மையப் பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுன்குமார், நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், கமிஷனர் அஜிதா பர்வீன், கவுன்சிலர் குமார், நகர்நல அலுவலர் ரெத்தினகுமார் பங்கேற்றனர்.
பரமக்குடி: பரமக்குடியில் எம்.எல்.ஏ., முருகேசன் சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். பரமக்குடி சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இந்திரா முன்னிலை வகித்தார். பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி பங்கேற்றனர்.
*போகலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் டாக்டர் கார்த்திக் முன்னிலை வகித்தார். போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா துவக்கி வைத்தார். துணைத் தலைவர் பூமிநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜகோபால் பங்கேற்றனர்.
* ஆர்.எஸ்.மங்கலம்: ரோட்டரி சங்கம் சார்பில், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் முனீஸ்வரி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

