/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அசுர வேகத்தில் வாகனங்களால் தனுஷ்கோடியில் குதிரைகள் பலி
/
அசுர வேகத்தில் வாகனங்களால் தனுஷ்கோடியில் குதிரைகள் பலி
அசுர வேகத்தில் வாகனங்களால் தனுஷ்கோடியில் குதிரைகள் பலி
அசுர வேகத்தில் வாகனங்களால் தனுஷ்கோடியில் குதிரைகள் பலி
ADDED : ஜன 22, 2025 07:14 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு தினமும் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களில் காட்டில் திரியும் மட்டக்குதிரைகள் சிக்கி உயிரிழக்கின்றன.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனங்கள், வாடகை வேன்கள், ஆட்டோக்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அடர்ந்த காப்புக் காடுகளில் ஏராளமான குதிரைகள் வாழ்கின்றன. இவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களில் சிக்கி பல குதிரைகள் உயிரிழக்கின்றன. இதனால் குதிரைகள் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது.
எனவே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தி, பலியாகும் குதிரைகளை பாதுகாக்க வனத்துறையினர் சரணாலயம் அமைக்க வேண்டும்.