ADDED : அக் 18, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சத்யா நகர் சேர்ந்த சண்முகம் மகன் பிரபு 25, இவர் மண்டபத்தில் தோணித்துறை கடற்கரை அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்கிறார்.
மதுகுடிக்கும் பழக்கமுள்ள இவர் நேற்று முன்தினம்(அக்.17) இரவு விடுதி மாடியில் இருந்தார். அப்போது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்த போது, விடுதி சுற்றி உள்ள பனைமட்டை வேலி மீது விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
