/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்
/
மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 25, 2026 08:41 AM

ஆர்.எஸ்.மங்கலம்: சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்றது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் குறித்து துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் செலினா திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் செந்தமிழ் செல்வன், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, திருவாடானை அரசு கலைக் கல்லுாரி முதல்வர் பழனியப்பன், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபீக் உட்பட பலர் கொண்டனர்.

