/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க ஐாக்டோ-ஜியோ அமைப்பு ஊர்வலம்
/
பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க ஐாக்டோ-ஜியோ அமைப்பு ஊர்வலம்
பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க ஐாக்டோ-ஜியோ அமைப்பு ஊர்வலம்
பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க ஐாக்டோ-ஜியோ அமைப்பு ஊர்வலம்
ADDED : ஏப் 23, 2025 05:37 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஐாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் அருகே இருந்து ஊர்வலம் துவங்கியது. ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
முடக்கி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி அரண்மனை வரை ஊர்வலமாக சென்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவபாலன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் அப்துல் நஜ்முதீன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் பூப்பாண்டியன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.